தெரிந்து கொள்வோம்: கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்



இன்றைய வாழ்க்கையில் கணினி ஒரு அத்தியாவசியமான பொருளாக உள்ளது. இன்று கணினி இல்லாத வீடுகளே இருக்க முடியாது. அப்படிப்பட்ட கணினி வாங்கும் போது சில விசயங்களை கவனிக்க வேண்டியது அவசியம். கவனிக்க வேண்டிய விசயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மானிட்டர் என்ற ஒன்றை தவிர மேசை கணினிக்கும், மடிக்கணினிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எனவே கூறும் அனைத்து விசயங்களும் இரண்டு கணினிக்கும் பொருந்தும்.

1.Processor
இது தான் கணினியின் மூளை போன்றது. நாம்  செய்யும் அத்தனை விசயங்களும் இயங்குவது இங்கு தான். இது இல்லை என்றால் எதுவுமே இல்லை.
தற்போதைய நிலையில் எது புதியதாக வந்து உள்ளது என்று பார்த்து வாங்குதல் நலம்.
அத்தோடு இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம், Processor Speed. இதைப்பொறுத்தே கணினியின் செயல்பாடு அமையும். இது குறைந்த பட்சம் 2.2 GHz என்ற அளவில் இருக்க வேண்டும். 
2. RAM
கணினியின் இருதயம் என்றால் அது இது தான். Processor சொல்லும் வேலைகளை என்ன வேகத்தில் முடிக்க வேண்டும் என்று தீர்மானிப்பதும் இதுவே. எனவே இது மிகச்சிறந்த அளவில் இருந்தால் மட்டுமே வேகமாக இயங்க முடியும். இல்லை என்றால் மெதுவாக தான்  கணினி இயங்கும்.
தற்போதைய நிலையில் 4GB RAM என்பது சரியான ஒன்று. 2GB என்பது மெதுவான கணினிக்கு என்று மாறிவிட்டது. ஆனாலும் ஏற்கனவே கணினி உள்ளவர்கள் 2GB-யை பயன்படுத்தலாம். அதற்கும் குறைவாக இருந்தால் மாற்ற முயற்சித்தல் நலம்.  Photoshop போன்ற பணிகளில் ஈடுபடுவோர் 8GB RAM உள்ள கணினி வாங்குதல் நலம்.
புதிய கணினி வாங்கும் போது Processor  மற்றும் RAM போன்றவற்றை ஒப்பிட்டு பார்த்து வாங்க வேண்டும்.
3. Hard Disk or HDD
தகவல்கள் அனைத்தையும் சேமித்து வைக்கும் இதன் பணி அளப்பரியது. புதியதாக கணினி வாங்கும் போது குறைந்த பட்சம் 320GB HDD இருக்குமாறு வாங்க வேண்டும். தகவல்கள் அதிகம் சேகரிக்க குறைந்த பட்சம் இது தேவை.
4.DVD R/W Drive
DVD Drive  கணினியில் வன்தட்டு எனப்படும் CD, DVD களை இயக்க உதவுகிறது. இதற்கு Configuration என்று ஒன்றும் சொல்ல இயலாது. ஆனால் கேபிள் மட்டும் SATA எனப்படும் 4-Pin  உள்ளதா என்று கேட்டுக்கொள்ளவும்.
5 . Mouse/Kayboard
மௌஸ் இப்போது எல்லா இடத்திலும் optical வகை தான் வருகிறது அதில் பிரச்சனை இல்லை. Keyboard பயன்படுத்துவது அவர் அவர் விருப்பம்
6. Graphics Card
இது Gaming, Graphic Design போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர்களுக்கு பயன்படும். இதை 1GB தெரிவு செய்வது நல்லது.
7.Monitor
கணினி என்றால் 17 Inch என்பதை மிகக்குறைவாக கொள்ளலாம். மடிக்கணினி விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்யலாம்
8. Pen Drive
பென் டிரைவ் வாங்கும் போது தற்போதைய நிலையில் 16GB வாங்கலாம். இதனை வாங்கும் போது நல்ல நிறுவனத்தின் பென் டிரைவ் ஆக வாங்க வேண்டும்.
இவை தான் புதியதாக கணினி வாங்கும் போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை.

0 comments:

 
google-site-verification: google18fa7bfb27754a8a.html google-site-verification: google089e704d9968b9b7.html